யானைகள் விபத்து...உறுதியளித்த ரயில்வே... Southern Railway

வரும் காலத்தில் யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க, மாநில வனத் துறைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
x
வரும் காலத்தில் யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க, மாநில வனத் துறைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பாலக்காடு - போத்தனூர் பகுதியில் வன உயிர்களைக் காப்பாற்றும் வகையில் தெற்கு ரயில்வேயின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
அதில், பாலக்காடு கோட்டத்தின் வாளையார் மற்றும் எட்டிமடை பகுதியில் 
காட்டு யானைகள் அடிக்கடி குறுக்கிடுவதைக் கருத்தில் கொண்டு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 45 கிலோ மீட்டர் வேகம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இனி வரும் காலங்களில் விபத்தை தடுக்க  ரயில் தண்டவாளங்களைக் கடக்கும் யானைகளை லோகோ பைலட்டுகள் தெளிவாகப் பார்ப்பதற்கு வசதியாக ரயில் பாதைகளில் உள்ள மரக்கிளைகள் தொடர்ந்து அகற்றுப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
 
யானைகள் தண்டவாளத்தை கடக்காமல் தடுக்க 12வோல்ட் மின்னழுத்தத்துடன் தரை மட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
யானை குறுக்கிடும் இடங்களில் தண்டவாளத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் அகலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
லோகோ பைலட்டுகளுக்கு  ரயில் பாதை தெளிவாக தெரிவதற்காக யானை குறுக்கிடும் இடங்களில் சோலார் விளக்குகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்