எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே 4 நிமிடங்களில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில், கடும் அமளிகளுக்கு இடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே 4 நிமிடங்களில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்
x
கடந்த 19ம் தேதி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, வேளாண் சட்டம் ரத்து மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே, குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே வேளாண் சட்ட  ரத்து மசோதா நிறைவேற்றப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், வேளாண் சட்டம் ரத்து மசோதா தொடர்பாகவும், உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் மக்களவை  ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. 12 மணிக்கு  மீண்டும் அவை தொடங்கியதும், எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே வேளாண் சட்டம் ரத்து மசோதாவை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். 4 நிமிடங்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்