கொரோனா பரவல் - கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
x
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகாவிற்கு வரும் அண்டை மாநில பயணிகள், ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மாணவர்களை 7 நாள் தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனையை உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று எல்லையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே பெங்களூருவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்