நவ.29-ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி என அறிவிப்பு - சிங்கு எல்லைப்பகுதியில் கூடி விவசாயிகள் ஆலோசனை

திங்கள்கிழமையன்று, நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த இருந்த டிராக்டர் பேரணி, ஒத்திவைக்கப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
நவ.29-ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி என அறிவிப்பு - சிங்கு எல்லைப்பகுதியில் கூடி விவசாயிகள் ஆலோசனை
x
விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சிங்கு எல்லைப்பகுதியில், சம்யுக்த கிசான் யூனியன் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத் தலைவர் தர்ஷன்பால் சிங், நவம்பர் 29 ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெறுவதாக இருந்த டிராக்டர் பேரணி ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 4ஆம் தேதி கூடி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். போராடி வரும் விவசாயிகளின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற, மாநில அரசுகள் மற்றும் ரயில்வே துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தினர். குறைந்த பட்ச ஆதார விலை, விவசாயிகள் மரணம் தொடர்பாக, அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை, போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்