ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு
பதிவு : நவம்பர் 28, 2021, 03:54 AM
ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு
ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு 

புதுச்சேரியில் துணிக்கடையில் 16 ஆயிரம் ரூபாய்க்கு துணிகள் வாங்கிவிட்டு கூகுல் பே மூலம் பணம் செலுத்துவது போல ஏமாற்றிய பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி, குண்டுபாளையம் பகுதியை சேர்ந்த தணிகாசலம், காந்தி நகர் வழுதாவூர் சாலையில் துணிகடை நடத்தி வருகிறார். கடந்த 19 ஆம் தேதி இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் 8 ஆயிரம் ரூபாய்க்கு துணிகள் வாங்கி கொண்டு அதற்கான பணத்தை கூகுள்-பே செய்துவிட்டதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அந்த பணம் தனிகாசலத்தின் வங்கி கணக்கிற்க்கு வராமல் இருந்துள்ளது. இதே போல் அருகே திலாசுபேட்டை பகுதியில் அமைந்துள்ள மற்றொரு துணிகடையிலும் ஒரு பெண் 8 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கி விட்டு கூகுல் பேயில் அனுப்புவது போல ஏமாற்றியதாக கூறப்படுகிறது.தன்வந்திரி போலீசார் இதுகுறுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது , இரண்டு கடையிலும் ஒரே பெண் தான் ஏமாற்றி சென்றிருப்பது தெரிய வந்த‌து. இதையடுத்து கதிர்காமம் பகுதியை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான அனுசியாவை போலீசார் கைது செய்தனர். கணவர் விட்டு சென்றதால், வருமானம் ஏதும் இன்றி இதுபோல துணிகளை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்த‌தாக அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

2 views

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் வரும் புதன்கிழமை வரை தடை விதித்துள்ளது.

11 views

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து மொட்டை அடித்த சம்பவம் - ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர்

டெல்லியில் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து முகத்தில் கருப்பு பொடியை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 views

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் - சகோதரிக்கு ஆதரவாக சோனு சூட் பிரச்சாரம்

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் சகோதரிக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் சோனு சூட் பிரச்சாரம்

12 views

2,00,000 டூ 2,500ஆக குறைந்த ஃபாலோவர்ஸ்... ட்விட்டர் மீது ராகுல் காந்தி சாடல்

தன்னுடைய ட்விட்டர் ஃபாலோவர்ஸ் குறைய மத்திய அரசு காரணம் என்றும் அதற்கு ட்விட்டர் துணைபுரிவதாகவும் ராகுல் காந்தி சாடல்

8 views

கடைகளில் விற்பனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசிகள்

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.