புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
x
தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா சூழல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் நிலை குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் குறித்தும் அதன் பண்புகள் மற்றும் பிற நாடுகளில் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து  பொதுமக்கள் அதீத எச்சரிக்கையுடன் இருப்பதோடு, முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைத்து பயணிகளையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் அபாயத்திற்கு உரியவை என வகைப்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாநிலங்களில் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய மாநிலங்களுடன் அதிகாரிகள் இணைந்து பணியாற்றுமாறு அறிவுறுத்திய பிரதமர் 

ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் வென்டிலேட்டர் கள் போன்றவை முறையாக செயல்படுவதையும் மாநிலங்களுடன் இணைந்து உறுதி செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்