ஆளுநருக்காக திறக்கப்பட்ட அணை - பெரும் சர்ச்சை... விசாரணை தீவிரம்...
பதிவு : நவம்பர் 27, 2021, 04:51 PM
ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை கர்நாடக ஆளுநர் பார்ப்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பெரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அம்மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக சிமோகா சென்றிருந்த அவர் அம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் ஜோக் நீர்வீழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நீர்வீழ்ச்சிக்கு மேல் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லிங்கனமக்கி அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக மின்சார கழக நிறுவனம் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரையோர மக்கள் குறித்து சிந்திக்காமல் ஆளுநரின் திருப்திபடுத்துவதற்காக அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கும் விவகாரம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அணை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.