வரதட்சணை கேட்டு சித்ரவதை - உயிரை விட்ட பெண் : கேரளாவை அதிர வைத்த மற்றொரு தற்கொலை

கேரளாவில் பெண் ஒருவரின் தற்கொலை, அதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டங்களால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதன் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்....
வரதட்சணை கேட்டு சித்ரவதை - உயிரை விட்ட பெண் : கேரளாவை அதிர வைத்த மற்றொரு தற்கொலை
x
கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இவருக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமானவர் முகமது சுஹைல். நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலில் விழவே, இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணமும் செய்து கொண்டனர். காதலிக்கும் போது துபாயில் வேலை பார்த்து வருவதாக கூறியிருக்கிறார் சுஹைல். ஆனால் திருமணம் முடிந்த பிறகு தான் சுஹைல் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ந்து போன மோபியா, ப்ரீலான்ஸ் டிசைனராக வேலை பார்த்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார். இவரது வருமானத்தை நம்பியே அவர்களின் குடும்பமும் இருந்துள்ளது. இதனிடையே திடீரென தான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும், இதற்காக 40 லட்ச ரூபாய் பணத்தை உன் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வா என மோபியாவிடம் கூறியிருக்கிறார் சுஹைல். ஆனால் சுஹைலின் குணத்தை அறிந்த மோபியா பணம் வாங்கி வர மறுக்கவே, அன்றிலிருந்து ஆரம்பமானது பிரச்சினை. 
பின்னர் சுஹைலின் தாய் ருகியா, தந்தை யூசூப் ஆகியோர் சேர்ந்து மோபியாவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத மோபியா, ஆலுவா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சுதீர், இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது தலாக் கொடுத்துள்ளார் சுஹைல். விவாகரத்தை சட்டப்படி செய்யுங்கள் என அங்கிருந்தவர்கள் கூறவே, மோபியா குடும்பத்தினரை சுஹைல் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த மோபியா, தன் கணவர் சுஹைலை அறைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுதீர், மோபியாவிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளாகி நேராக வீட்டுக்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது தன் மரணத்திற்கு காரணம் என கூறி கணவர், மாமியார், மாமனார் பெயரோடு இன்ஸ்பெக்டர் சுதீர் பெயரையும் எழுதி வைத்திருந்தார். இதனிடையே சுஹைல் மற்றும் அவரின்  பெற்றோர் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இன்ஸ்பெக்டர் சுதீர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பலரையும் கொந்தளிக்க வைத்தது. சுதீர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டக்காரர்கள் தடுப்புச் சுவற்றை உடைத்தனர். கூட்டத்தை கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டதால் அந்த  இடமே பரபரப்பானது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர்...
ஒரு பெண்ணின் மரணம் கேரளாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே உத்ராவின் மரணம்  பெரிதும் பேசப்பட்ட நிலையில் இப்போது மோபியா பர்வீனின் மரணமும் அங்கே பேசுபொருளாகியிருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்