13 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணம் - உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

இன்றும் நினைத்தாலே நெஞ்சை பதற வைக்கும் சம்பவங்களுள் ஒன்று, மும்பை தீவிரவாத தாக்குதல்.. 166 பேரை பலி கொண்ட இந்த கொடூர தாக்குதல் நடந்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற அந்த நினைவுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
13 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணம் - உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
x
இன்றும் நினைத்தாலே நெஞ்சை பதற வைக்கும் சம்பவங்களுள் ஒன்று, மும்பை தீவிரவாத தாக்குதல்.. 166 பேரை பலி கொண்ட இந்த கொடூர தாக்குதல் நடந்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற அந்த நினைவுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். என்றும் பம்பரமாக சுழன்று கொண்டிக்கும் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை, இரவோடு இரவாக அலறி துடித்த நாள் அது... 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இரவு, கண் மூடி கண் திறப்பதற்குள் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 58 உயிர்கள் துடித்துடித்து இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.. என்ன நடந்தது என்பதை அறிவதற்குள்...  காமா மருத்துவமனையை நோக்கி சென்ற தீவிரவாதிகளை தடுக்க முயன்ற போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் அடுத்தடுத்து காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் என மும்பையின் முக்கிய இடங்களில் துப்பாக்கிக்கும், குண்டு வீச்சுக்கும் அப்பாவி உயிர்கள் பலியாகின.. நூற்றுக்கணக்கானோரை பிணை கைதிகளாக வைத்து, தீவிரவாதிகள் அச்சுறுத்திய நிலையில், தங்கள் உயிர்களை பணையம் வைத்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் கமாண்டோ பிரிவினர். 
இறுதியாக நவம்பர் 29 ஆம் தேதி இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது... 4 நாட்களாக மும்பையின் 12 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட தாக்குதலுக்கு போலீசார், வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா இயக்கம் என்பதையும், கராச்சியில் இருந்து மும்பைக்கு கப்பல் வாயிலாக வந்த பத்து தீவிரவாதிகள் திட்டமிட்டப்படி தாக்குதலை நடத்தியதையும்,உயிருடன் பிடிப்பட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப் ஒப்பு கொண்டான். 2012 ஆம் ஆண்டு அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.தாக்குதல் நடத்தப்பட்டு, இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், மும்பை தாஜ் ஹோட்டலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்... மறக்க முடியாத வடுவை ஏற்படுத்தி விட்டு சென்ற இந்த நாள், தீவிரவாதத்திற்கு எதிரான நம் குரலை என்றும்  எதிரொலித்து கொண்டிருக்கும். 



Next Story

மேலும் செய்திகள்