புதிய வேலைகளில் சேர ஒரே EPF கணக்கு... விதிகளில் திருத்தம்

தொழிலாளர்கள், இதர ஊழியர்கள் வேலை மாறும் போது இனி புதிய இ.பி.எப் கணக்குகளை தொடங்க தேவையில்லை.
புதிய வேலைகளில் சேர ஒரே EPF கணக்கு... விதிகளில் திருத்தம்
x
மாதம் 15,000 ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு இ.பி.எப் எனப்படும் தொழிலளார் வருங்கால வைப்பு நிதி கணக்கு கட்டாயமாக தொடங்கப்பட வேண்டும். அதற்கு மேல் மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கும் இதை தொடங்க சட்டத்தில் இடமுள்ளது. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பணி மாற்றம் செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் புதிய இ.பி.எப் கணக்கு தொடங்க வேண்டிய நிலை இதுவரை உள்ளது. இனி வேலை மாறுகிறவர்கள் ஒரே இ.பி.எப் கணக்கை தொடர்ந்து பயன்படுத்த இ.பி.எப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சி-டாக் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மத்தியபடுத்தப்பட்ட சாப்வேர் மூலம், இது முன்னெடுக்கப்படும். ஒரு ஊழியருக்கு பல கணக்குகள் இருந்தால், அவற்றை இனி எளிதாக ஒன்று சேர்த்து, ஒரே கணக்காக மாற்ற முடியும். இதன் மூலம் பணி மாற்றம் செய்பவர்களுக்கு சிக்கல்கள் குறையும் என்று கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்