விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
x
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 
சுமார் பத்தாயிரத்து 50 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 300 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்படும் இந்த விமான நிலையம் உத்திரபிரதேசத்தின் 5வது சர்வதேச விமான நிலையமாகும். மாநிலத்தின் பன்முக வளர்ச்சிக்கு சான்றாக விளங்கும் இந்த விமான நிலையத்தின் கட்டிடப்பணிகள் 2024ம் ஆண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ஒரு கோடியே 20 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைவழிப் போக்குவரத்து மையமாக விளங்கும் வகையிலும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திலும் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையம் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தின் பயணிகள் நெருக்கடியை குறைக்கும் என எதிர்பார்ப்படுகிறது. மேலும், கரியமில வாயுவை வெளியேற்றாத இந்தியாவின் முதல் விமான நிலையமாக நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக விமான நிலைய வளாகத்தில் மரங்களை பயன்படுத்தி வனப்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்