வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு ஒப்புதல்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
x
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரின் போது மத்திய அரசு 3 வேளான் சட்டங்களை கொண்டு அமல்படுத்தியது. சட்டங்களை கொண்டு வரும் வழிமுறை படி, முதலில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக அமல்படுத்தப்பட்டது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

வரும் 26 ம் தேதியுடன், விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், கடந்த 19 ஆம் தேதி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இ​ந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு 29 - ம் தேதி முதல் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு முழு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்