வேலைவாங்கி தருவதாக மோசடி - 241 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய 3 பேர் கைது

தெலங்கானாவில் சாரணர் இயக்கத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி 241 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலைவாங்கி தருவதாக மோசடி - 241 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய 3 பேர் கைது
x
தெலங்கானாவில் சாரணர் இயக்கத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி 241 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோசடிகாரர்களின் வலையில் படித்த இளைஞர்களே சிக்கி வரும் நிகழ்வுகள் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. படித்துவிட்டு பணிக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை குறிவைத்து வீழ்த்தி உள்ளது 4 பேர் கொண்ட கும்பல்

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த வினைப்பால் ரெட்டி மற்றும் அனுசுயா ஆகியோர்  கிராம வருவாய்த்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இரண்டு பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தால் இருவரும் குடும்பத்தை பிரிந்து தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். முறைகேட்டில்  சிக்கியதால் பணியை இழந்த 2 பேரும் குறுக்கு வழியில் முன்னேறுவதற்கு உதவி செய்துள்ளார் டெல்லியை சேர்ந்த சின்ஹா.

தேசிய சாரணர் இயக்கத்தின் கமிஷனர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சின்ஹாவை சந்திப்பதற்காக மூன்று பேரும் அடிக்கடி டெல்லிக்கு சென்று வந்துள்ளனர். 

சின்ஹாவின் வழிகாட்டுதலின்படி, வினைப்பால்ரெட்டி தேசிய சாரணர் இயக்கத்தின் ஆந்திர மாநில கமிஷனர் என்றும் அனுசியா அதே இயக்கத்தின் தெலங்கானா மாநில கமிஷனர் என்றும்  தாங்களாகவே பதவிகளை ஏற்படுத்தி கொண்டனர். 

பின்னர், தொடர்ந்து இரண்டு மாநிலங்களிலும் சாரணர் இயக்கத்தில் ஏராளமான அளவில் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளதாக கூறி வந்த அவர்களை, நம்பி  241 பேர்  தலா 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் போலி பணி ஆவணங்களை தயாரித்து முதற்கட்டமாக 3 பேருக்கு கொடுத்துள்ளனர்.

வேலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் சாரணர் இயக்க அலுவலகங்களுக்கு சென்றபோது அவை போலி உத்தரவுகள் என்று தெரியவந்தது.

சாரணர் இயக்கத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பி பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வரங்கள் போலீசார் வினைப்பால் ரெட்டி, அனுசுயா மற்றும் அவருக்கு உதவிய நவீன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து இருபத்தி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு கார்கள், 2 செல்போன்கள், போலி அடையாள அட்டைகள் மற்றும் சாரணர் இயக்க சீருடைகள் ஆகியவற்றை செய்யப்பட்டது. 

விசாரணைக்கு பின் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலை வாங்கி தருவதாக யார் பணம் கேட்டாலும் கொடுத்து ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வந்தாலும், அதற்கு யாரும் செவி சாய்ப்பதில்லை என்பதையே காட்டுகிறது இது போன்ற சம்பவங்கள்.


Next Story

மேலும் செய்திகள்