நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் - 26 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 26 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் - 26 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்
x
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 26 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு 26 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அண்மையில் திரும்ப பெறப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வேளாண் சட்ட திரும்பப்பெறும் மசோதா 2021-ம்
குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதை தடுத்து பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்க வழிவகை செய்யும் கடத்தல் தடுப்பு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளது.அதேபோல், மின்சார ஒழுங்குமுறை திருத்த மசோதா, இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021 போன்ற மசோதாக்களும் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் பணத்தை ஒழுங்குமுறை படுத்தும் கிரிப்டோகரன்ஸி ஒழுங்குமுறை சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்