14 கெட்ட குணங்களை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஆட்சியாளர்கள் தாங்கள் எடுக்கும் முடிவு நல்லதா கெட்டதா என நாள்தோறும் சிந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
14 கெட்ட குணங்களை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
x
ஆட்சியாளர்கள் தாங்கள் எடுக்கும் முடிவு நல்லதா கெட்டதா என நாள்தோறும் சிந்திக்க வேண்டும் என  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள 14 கெட்ட குணங்களை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். ஆட்சியாளர்கள் தாங்கள் எடுக்கும் முடிவு நல்லதா கெட்டதா என நாள்தோறும் சிந்திக்க வேண்டும் எனவும் ஆட்சியாளர்கள் நாள்தோறும் மேற்கொள்ளும் பணியில் ஏதேனும் கெட்ட அம்சங்கள் உள்ளனவா என்பதை சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரமணா கூறினார். உண்மையான கல்வி என்பது அறநெறிகளையும், பணிவு ஒழுக்கம், இரக்க உணர்வு, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை கொண்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி ரமணா  தெரிவித்தார். அதேபோல் கொரோனா பெருந்தொற்று, சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளதாகவும் இதுபோன்ற நேரத்தில் சுயநலமற்ற சேவையே அவசியமாகிறது எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்