நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
x

ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சிபிஐ மேற்கொண்ட வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது உறுதியானதால் அவர் விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாகவும், அவரை துன்புறுத்தியதாகவும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 2 பேர், உளவுத்துறை அதிகாரி ஒருவர் என மூன்று பேர் கைதாகினர். இந்த வழக்கில், மூன்று பேருக்கும் கேரள உயர்நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் மாதம் முன் ஜாமின் அளித்தது. இதனை எதிர்த்து சிபிஐ அளித்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கும் கேரள காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்