மீனவர் கருத்தரங்கில் நடைபெற்ற சலசலப்பு; தமிழக மீனவர்கள்-நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இடையே வாக்குவாதம்

டெல்லியில் நடைபெற்ற மீனவர் கருத்தரங்கில் தமிழக மீனவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பட்டளருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
மீனவர் கருத்தரங்கில் நடைபெற்ற சலசலப்பு; தமிழக மீனவர்கள்-நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இடையே வாக்குவாதம்
x
தலைநகர் டெல்லியில் உலக மீனவர்கள் தினத்தை ஒட்டி, மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  முன்னதாக இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புரூசோத்தம் ரூபாலா கலந்து கொள்ள இருப்பதாகவும், அப்போது மத்திய அரசின் புதிய மீன்வள மசோதா தொடர்பாக மீனவ சங்கங்கள் ஆலோசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
ஆனால் திட்டமிட்டபடி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கலந்து கொள்ள ஏற்பாடுகளை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த
ஆனந்த் சாகு என்பவர் மத்திய அரசின் மீனவ மசோதக்களை ஆதரிப்பது போலவும், புரூசோத்தம் ரூபாலா மீனவர்களுக்கு பாடுபடுவது போலவும் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக எம்.பி தம்பிதுரை பங்கேற்ற நிலையில், அவர் முன்னர், 15 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்