2வது டோஸ் போடாததால் 3 லட்சம் பேருக்கு கொரோனா

கேரளாவில் காலக்கெடு முடிந்தும் 14 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தி கொள்ள வில்லை என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
2வது டோஸ் போடாததால் 3 லட்சம் பேருக்கு கொரோனா
x
கேரளாவில் காலக்கெடு முடிந்தும் 14 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தி கொள்ள வில்லை என சுகாதாரத்துறை கூறியுள்ளது. தற்பொழுது வரை கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆறாயிரமாக பதிவாகி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசியை செலுத்த மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் காலக்கெடு முடிந்தும்14 லட்சம் பேர் கொரோனாவின் 2வது தடுப்பூசியை செலுத்தி  கொள்ளவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் செலுத்திய பிறகு 78 ஆயிரம் பேர் வெளிநாடு சென்று விட்டதாகவும், 22 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்த மறுப்பு தெரிவிப்பதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்