டிஜிபி, ஐஜி மாநாடு - பிரதமர் மோடி பேச்சு

மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, ட்ரோன் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிஜிபி, ஐஜி மாநாடு  - பிரதமர் மோடி பேச்சு
x
மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, ட்ரோன் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். லக்னோவில் நடந்த காவல்துறை டிஜிபி-க்கள், ஐஜி-க்களின் 56 ஆவது மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். காவல்துறை தொடர்புடைய அனைத்து சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும், வழக்கு ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நிறுவனமயமாக்கப்பட்ட மாற்றல் முறையாக உருவாக்க  வேண்டும் என வலியுறுத்தினார்.நாடு முழுவதும் காவல் படையினருக்கு பயனளிக்கும் விதத்தில், இடைச் செயல்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்த அவர்,அடிமட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருங்கால தொழில்நுட்பங்களைப் பின்பற்ற, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், உயர் அதிகார காவல் தொழில்நுட்ப இயக்கத்தை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.கொரோனா தொற்றுக்குப் பின்னர், பொதுமக்கள் மீது காவல்துறையின் அணுகுமுறை மாறியிருப்பதை பிரதமர் பாராட்டினார்.



Next Story

மேலும் செய்திகள்