பிரதமருக்கு சம்யுக்த கிஷான் மோர்ச்சா கடிதம்

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பு வெளியான நிலையில், 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளது.
பிரதமருக்கு சம்யுக்த கிஷான் மோர்ச்சா கடிதம்
x
மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பு வெளியான நிலையில், 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய பொருட்களுக்கும் சட்டப்பூர்வ உரிமையாக்க வேண்டும் என்றும், மின்சார திருத்த மசோதா 2021ஐ மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. காற்றுதர மேலாண்மை சட்டம் 2021 மூலம் விவசாயிகளுக்கு எதிரான தண்டனை விதிகளை அகற்ற வேண்டும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகள் நினைவிடம் அமைக்க சிங்கு எல்லையில் நிலம் ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









Next Story

மேலும் செய்திகள்