திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி பேரணி - சம்யுக்த கிஷான் மோர்ச்சா அறிவிப்பு

திட்டமிட்டபடி வரும் 29 -ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி, விவசாயிகளின் பேரணி நடைபெறும் என்று, சம்யுக்த கிசன் மோர்ச்சா அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி பேரணி - சம்யுக்த கிஷான் மோர்ச்சா அறிவிப்பு
x
மூன்று வேளாண்மை சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிங்கு எல்லையில் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த போராட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார். 
அதன்படி வரும் 22-ம் தேதி லக்னோ எல்லைப் பகுதிகளில் போராட்டமும், 26 ஆம் தேதி விவசாயிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக கூறினார்.  இதுபோல 29 ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெறும் எனவும் பல்பீர் சிங்,  தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து 27 ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
==


Next Story

மேலும் செய்திகள்