சமூகவலை தளம் மூலம் காதல் - இளைஞர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது
பதிவு : நவம்பர் 21, 2021, 11:39 AM
கேரளாவில், வாலிபர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்.
இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலி மண்ணாங்கண்டத்தை சேர்ந்த ஷீபாவும்,
திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண்குமாரும்,
சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகிறார்கள். இருவரும் காதலித்துள்ளனர். ஷீபா திருமணமானவர் என்பதும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதும் பின்னர் தெரியவந்தது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த இளைஞனை, ஷீபா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.  பின்னர் 2 லட்சம் ரூபாய் தருமாறு ஷீபா அருணை மிரட்டியதாக கூறப்படுகிறது. அது தொடர்பான விவரங்களைப் பேசுவதற்காக அந்த இளைஞனை, கடந்த 16 தேதி  அடிமாலிக்கு ஷீபா வரவழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஷீபா மறைத்து வைத்திருந்த  ஆசிட்டை அருண் முகத்தில் ஊற்றியுள்ளார். இந்த தாக்குதலில் அருணின் ஒரு கண் பார்வை பறிபோனது.  இந்நிலையில் முறிக்காசேரியில் உள்ள கணவர் வீட்டில் பதுங்கி இருந்த ஷீபாவை அடிமாலி போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

51 views

கோவாக்சின் செலுத்தியோருக்கு ஆஸி. அனுமதி - தனிமைப்படுத்த தேவையில்லை என அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எந்தெந்த நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....

50 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

27 views

பிற செய்திகள்

"பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி" - முதல்வர் ஸ்டாலின்

புதுக்கோட்டை அருகே, ரோந்துப் பணியின்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து உள்ளார்.

9 views

நடிகர் சூர்யாவுக்கு பாடகர் திருமூர்த்தி ஆதரவு - டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட திருமூர்த்தி

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

4 views

திமுக எம்.பி.க்கள் கூட்டம் - 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யக் கோரி, திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

12 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெயிண்டரைக் கல்லால் தாக்கி - சிறுமியின் தாய் மாமன், அத்தை கைது

கடையநல்லூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், பெயிண்டரைக் கல்லால் தாக்கி கொலை செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 views

"சென்னைக்கு தொடர்ந்து தலைமை ஏற்க வேண்டும்" - தோனிக்கு முதல்வரின் "ஒன்ஸ்மோர் கோரிக்கை"

4 வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக பாராட்டு விழா நடைபெற்றது.

12 views

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் - போராட்டத்தில் குதித்த பல்லாயிரக்கணக்கானோர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அநீதிகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.