சிதிலம் அடைந்த தொகுப்பு வீடுகள் - குடியிருப்பு வாசிகள் அச்சம்

ஒசூர் அருகேயுள்ள தொகுப்பு வீடுகளில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சிதிலம் அடைந்த தொகுப்பு வீடுகள் - குடியிருப்பு வாசிகள் அச்சம்
x
ஒசூர் அருகேயுள்ள தொகுப்பு வீடுகளில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள அத்தூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் 200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில்  28க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை, முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பொது மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.  தற்போது பெய்து வரும் தொடர் மழையால், மேற்கூரை வழியாக மழை நீர் ஒழுகும் நிலையும் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். வீடுகளை பழுது பார்க்க தங்களிடம் போதுமான பொருளாதார வசதி இல்லை என்றும்,  தமிழக அரசு தங்களுக்கு நிதியுதவி அளித்து உதவ வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்