3 வேளாண் சட்டங்கள் வாபஸ் - மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்
பதிவு : நவம்பர் 19, 2021, 02:54 PM
மாற்றம் : நவம்பர் 19, 2021, 03:10 PM
மூன்று வேளாண் சட்டங்களின் பலனை விவசாயிகளுக்கு விளக்க முடியாத காரணத்தினால் அதை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களின் பலனை விவசாயிகளுக்கு விளக்க முடியாத காரணத்தினால் அதை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குருநானக் ஜெயந்தியையொட்டி, நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் உரையாற்றிய  பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான விளக்கத்தை கூறியுள்ளார். விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட மண் ஆரோக்கிய அட்டைகள்  சாகுபடியை அதிகரிக்க உதவியுள்ளதாகவும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறிய பிரதமர், கிராமப்புற விவசாய சந்தை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.நாட்டில் உள்ள ஆயிரம் மண்டிகள் இ-மண்டிகளாக மாற்றப்பட்டு, விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர்,  விவசாயிகளின் ஒருபகுதியினர் அதை எதிர்த்ததாக தெரிவித்தார். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி கூற முயற்சித்து பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும், விவசாயிகள் நீதிமன்றம் வரை சென்று போராடியதால் அவர்களின் ஆதரவை பெற முடியவில்லை என்றார். வேளாண் சட்டங்களின் நலனை விவசாயிகளுக்கு விளக்க முடியாததை அரசின் தவறாக கருதுவதாக கூறிய பிரதமர், அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். மேலும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளதால்,  விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு தங்களது வீட்டிற்கு செல்லுமாறு கேட்டு கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

60 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

3 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

தங்க நகைகள் திருடு போனதாக கூறி நாடகம் - மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர்

தங்க நகைகள் திருடு போனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 7 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

16 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

(24/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(24/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.