ஆன்லைன் கல்வியில் அசத்தும் கேரளா..!

குழந்தைகளுக்கான ஆன்லைன் கல்வியில் கேரள மாநிலம் சிறப்பிடத்தை பிடித்துள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் கல்வியில் அசத்தும் கேரளா..!
x
குழந்தைகளுக்கான ஆன்லைன் கல்வியில் கேரள மாநிலம் சிறப்பிடத்தை பிடித்துள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 


நடப்பாண்டிற்கான ஏஎஸ்இஆர் எனப்படும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை வெளியாகியுள்ளது. 

இதில் கொரோனாவால் கேரள மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட போதும் கூட, அங்கு ஆன்லைன் கல்வி மூலம் 91 சதவீதம் குழந்தைகள் பயனடைந்து வருவது தெரியவந்துள்ளது. 

கேரளாவிற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 45 புள்ளி 5 சதவீத குழந்தைகளும், கர்நாடகாவில் 34 புள்ளி 1 சதவீத குழந்தைகளும் ஆன்லைன் கல்வி மூலம் பயனடைவது தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் 27 புள்ளி 4 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 13 புள்ளி 9  சதவீத குழந்தைகளும் ஆன்லைன் கல்வியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது  என்பது தெரியவந்துள்ளது. 

கேரளாவில் டிஜிட்டல் வகுப்புகள், விக்டர்ஸ் சேனல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகளை இணைக்கும் முயற்சி என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், 

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 'ஒயிட் போர்டு' என்ற சமூக ஊடக வகுப்புகள், தொழிற்கல்வி பாடங்களுக்கு இ-பள்ளிகள் என குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அலைபேசி இல்லாத குழந்தைகளுக்கு அலைபேசி, டிவி, இணையதள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்படுவதும், கேரளாவில் கல்வி தடை படாமல் சிறப்பாக செயல்பட காரணம் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்