ஆடைக்கு மேல் தீண்டுவது பாலியல் குற்றமாகாது என்ற தீர்ப்பு ரத்து
பதிவு : நவம்பர் 18, 2021, 07:29 PM
மகாராஷ்டிரத்தில் சிறுமியை ஆடைக்கு மேல் தீண்டியது பாலியல் குற்றமாகாது என கூறி போக்சோ சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிறுமியை ஆடைக்கு மேல் தீண்டியது பாலியல் குற்றமாகாது என கூறி போக்சோ சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2016ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஸ் என்பவர் 12 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆடை மீது கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் போக்சோவில் கைது செய்யப்பட்ட சதீஸ்க்கு  3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கைதான சதீஸை குற்றமற்றவர் என  நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்தார். ஆடைகளை களையாமல் மேலே தொடுவது பாலியல் துன்புறுத்தலில் சேராது என்றும், போக்சோ சட்டத்தின் கீழ் அது குற்றமாகாது என்றும் தீர்ப்பளித்தது சர்ச்சையானது. 

சிறுமியின் ஆடையை அகற்றாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குற்றமாகாது என்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிற்கு கண்டன குரல்கள் வலுத்ததுடன், தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு, நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில், சிறுமியை ஆடையுடன் தீண்டியது பாலியல் சீண்டலாகாது என தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்ட சதீஸை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

போக்சோ சட்டத்தில் கைது செய்ய உடலோடு உடல் தீண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நீதிபதி, மும்பை உயர்நீதிமன்ற கூற்றுப்படி உடலோடு உடல் தீண்டினால் தான் பாலியல் குற்றம் என குறுக்கி பொருள் கொண்டால் போக்சோ சட்டத்தின் நோக்கம் சிதைந்து விடும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

501 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

வேகமாக உயரும் கொரோனா - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 9 மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

8 views

டெல்லியில் குறைந்து வருகிறதா கொரோனா பாதிப்பு ?

டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

8 views

கேரளாவை மிரட்டும் கொரோனா- ஒரே நாளில் 26,514 நபர்கள் பாதிப்பு

கேரளாவில் மேலும் 26 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்து 69 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது.

6 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

16 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

13 views

தங்க நகைகள் திருடு போனதாக கூறி நாடகம் - மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர்

தங்க நகைகள் திருடு போனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 7 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.