ஆடைக்கு மேல் தீண்டுவது பாலியல் குற்றமாகாது என்ற தீர்ப்பு ரத்து
பதிவு : நவம்பர் 18, 2021, 07:29 PM
மகாராஷ்டிரத்தில் சிறுமியை ஆடைக்கு மேல் தீண்டியது பாலியல் குற்றமாகாது என கூறி போக்சோ சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிறுமியை ஆடைக்கு மேல் தீண்டியது பாலியல் குற்றமாகாது என கூறி போக்சோ சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2016ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஸ் என்பவர் 12 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆடை மீது கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் போக்சோவில் கைது செய்யப்பட்ட சதீஸ்க்கு  3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கைதான சதீஸை குற்றமற்றவர் என  நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்தார். ஆடைகளை களையாமல் மேலே தொடுவது பாலியல் துன்புறுத்தலில் சேராது என்றும், போக்சோ சட்டத்தின் கீழ் அது குற்றமாகாது என்றும் தீர்ப்பளித்தது சர்ச்சையானது. 

சிறுமியின் ஆடையை அகற்றாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குற்றமாகாது என்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிற்கு கண்டன குரல்கள் வலுத்ததுடன், தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு, நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில், சிறுமியை ஆடையுடன் தீண்டியது பாலியல் சீண்டலாகாது என தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்ட சதீஸை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

போக்சோ சட்டத்தில் கைது செய்ய உடலோடு உடல் தீண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நீதிபதி, மும்பை உயர்நீதிமன்ற கூற்றுப்படி உடலோடு உடல் தீண்டினால் தான் பாலியல் குற்றம் என குறுக்கி பொருள் கொண்டால் போக்சோ சட்டத்தின் நோக்கம் சிதைந்து விடும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1192 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

241 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

167 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

51 views

பிற செய்திகள்

வங்கிகளின் பலம் பல மடங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய வங்கிகளின் பலம், பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

36 views

கார் விபத்தில் பலியான 2 மாடல் அழகிகள் : திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கேரள மாநிலம் கொச்சியில் கார் விபத்தில் 2 மாடல் அழகிகள் பலியான வழக்கில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 views

மும்பை ரயில் நிலையத்தில் பாட் அறைகள்... - சொகுசு அறைகளில் நவீன வசதிகள்

இந்தியாவிலே முதன் முறையாக மும்பை ரயில் நிலையத்தில் பாட் (Pod) அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

18 views

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்; "முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் கண்காணிப்பார்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு உத்தரவு

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்குகளின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் கண்காணிப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

11 views

"விஷாலை பார்த்தால் புனித் நினைவு வருகிறது" - புனித் ராஜ்குமாரின் சகோதரர்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அஞ்சலி நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் நடைபெற்றது.

34 views

புனித்திற்கு பிடித்த பாடலை பாடி மேடையில் கண்ணீர் சிந்திய புனித் சகோதரர் சிவராஜ்குமார்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அஞ்சலி நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் நடைபெற்றது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.