கார் விபத்தில் பலியான 2 மாடல் அழகிகள் : திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கேரள மாநிலம் கொச்சியில் கார் விபத்தில் 2 மாடல் அழகிகள் பலியான வழக்கில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் விபத்தில் பலியான 2 மாடல் அழகிகள் : திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
x
கேரள மாநிலம் கொச்சியில் கார் விபத்தில் 2 மாடல் அழகிகள் பலியான வழக்கில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"மிஸ் கேரளா" அழகிப் போட்டியில் பங்கேற்று முதல் 2 இடங்களைப் பிடித்த மாடல் அழகிகள் இவர்கள். கொச்சியைச் சேர்ந்த இருவரும் கடந்த வாரம், எர்ணாகுளத்தில் உள்ள ஓட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பிறகு, காரில் புறப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி முற்றிலும் சேதம் அடைந்திருந்தது.

விபத்தில் மாடல் அழகிகள் அன்சி கபீரும், அஞ்சனா சாஜனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது நண்பர்கள் முஹம்மது ஆஷிக் மற்றும் அப்துல் ரஹ்மான் உடன் பயணித்த நிலையில், முகம்மது ஆஷிக் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்... காரை ஓட்டிய அப்துல் ரஹ்மான் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"மிஸ் கேரளா" அழகிகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்...

இதனிடையில், மாடல் அழகிகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும்...இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்றும் புகார்கள் கிளம்பின. விருந்து நடந்த ஓட்டலில் அன்சி மற்றும் அஞ்சனா இருவரிடமும் சிலர் தகராறு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல், புகாருக்கு வலுசேர்த்தது. 

இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், விருந்து நடந்த ஓட்டலில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய முற்பட்டனர். ஆனால், ஆதாரங்கள் இருந்த 2 ஹார்ட் டிஸ்க்குகளில், ஒன்றை அழித்து விட்ட ஓட்டல் உரிமையாளர் ராய், போதிய ஆதாரம் இல்லாத ஒரே ஒரு ஹார்ட் டிஸ்கை மட்டும் போலீசாரிடம் கொடுத்துள்ளார்...

ஓட்டலில் பிரச்சினை நடந்தது ஏன்...? சிசிடிவி காளட்சிகள் அழிக்கப்பட்டது ஏன்...? அதிலும் குறிப்பாக, இவர்களின் காரின் பின்னால் ஆடி கார் ஒன்று பின் தொடர்ந்தது எதற்காக...? என்ற அன்சி கபீரின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதில்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்...

இரண்டு மாடல் அழகிகள் பலியான சம்பவம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் ராய், ஊழியர்கள் விஷ்ணு, மெல்வின், லின்சன், ஷிஜுலால் மற்றும் அனில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை வேகம் எடுத்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்