லக்கிம்பூர் வன்முறை சம்பவம்; "முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் கண்காணிப்பார்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு உத்தரவு

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்குகளின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் கண்காணிப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லக்கிம்பூர் வன்முறை சம்பவம்; முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் கண்காணிப்பார் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு உத்தரவு
x
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்குகளின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் கண்காணிப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. லக்கீம்பூர்கிரி வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, லக்கிம்பூர்கிரி வன்முறை சம்பவம் தொடர்பான வழக்குகளின் எஸ்ஐடி விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் கண்காணிப்பார் என இந்த அமர்வு தெரிவித்துள்ளது. லக்கிம்பூர்கிரி வன்முறை சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதை நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் தலைமையிலான ஆணையம் உறுதி செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவில் ஐபிஎஸ் அதிகாரிகளான சிரோத்கர், தீபிந்தர் சிங், ஐஜி பத்மஜா சவுகான் ஆகியோரும் இடம் பெறுவார்கள்.இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்