7,287 கிராமங்களில் 4-ஜி டவர்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தங்கிய கிராமங்களில் 4ஜி மொபைல் டவர்கள் அமைக்க 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
7,287 கிராமங்களில் 4-ஜி டவர்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
நாட்டில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தங்கிய கிராமங்களில் 4ஜி மொபைல் டவர்கள் அமைக்க 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தை அடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அப்போது ஆந்திரா, சத்தீஷ்கார், மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பின்தங்கிய கிராமங்களில் 4-ஜி சேவை கிடைக்கும் தொலைதொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

5 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 287 பின்தங்கிய கிராமங்களில் 4ஜி டவர்கள் அமைக்கப்படுகிறது என்றும் இத்திட்டத்திற்கான மொத்த செலவு 6 ஆயிரத்து 466 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும்  அவர் கூறினார்.  இத்திட்டம் மூலம் பின்தங்கிய கிராமங்களுக்கு டிஜிட்டல் தொடர்பு அதிகரிக்கும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்