"தணிக்கை வலிமையானால் நிர்வாகம் வெளிப்படையாகும்" - பிரதமர் மோடி

தணிக்கை, வலிமை மற்றும் விஞ்ஞானபூர்வமாக இருந்தால், நமது நிர்வாகம் வலிமையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தணிக்கை வலிமையானால் நிர்வாகம் வெளிப்படையாகும் - பிரதமர் மோடி
x
தணிக்கை, வலிமை மற்றும் விஞ்ஞானபூர்வமாக இருந்தால், நமது நிர்வாகம் வலிமையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

தணிக்கை துறை எனப்படும் சிஏஜி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முதல் தணிக்கை தினத்தை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். சிஏஜி-யின் வரலாற்று தோற்றத்தை குறிக்கும் வகையிலும், வெளிப்படையான, பொறுப்புடைமை மிக்க நிர்வாகத்துக்கு உதவி வருவதைக் குறிக்கும் வகையிலும் தணிக்கை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிஏஜி ஒரு நிறுவனம் என்ற முறையில் நமது சொத்து என்ற பிரதமர் மோடி, அதை பாதுகாப்பது, ஒரு தலைமுறையின் கடமை என்றும் குறிப்பிட்டார். தணிக்கை என்பது மிகவும் அச்சத்துடன் பார்க்கப்பட்ட காலம் மாறி, தற்போது மதிப்பு கூட்டல் அங்கமாக பார்க்கப்படுகிறது என்றார். தணிக்கை என்பது வலிமையானதாகவும் விஞ்ஞானபூர்வமானதாகவும் இருந்தால், வெளிப்படைத் தன்மையான நிர்வாகம் இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்