"பழங்குடியினர் நலனுக்காக பணி செய்பவர்கள் வைரங்கள்" - பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

பழங்குடியினர் நலனுக்காக பணியாற்றுபவர்களே நாட்டின் உண்மையான வைரங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் நலனுக்காக பணி செய்பவர்கள் வைரங்கள் - பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
x
பழங்குடியினர் நலனுக்காக பணியாற்றுபவர்களே நாட்டின் உண்மையான வைரங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா வின் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலின் ஜம்புரி மைதானத்தில் விழா நடைபெற்றது. ஜன் ஜாதிய கவுரவ் தின மகா சம்மேளனத்தில் கலந்து கொண்டு  சமுதாய நலனுக்கான பல்வேறு முன்முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். சொந்த கிராமங்களிலேயே ரேசன் பொருள் வாங்கும் திட்டம், ரத்த சோகைக்கான சிகிச்சை திட்டம் என, பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி, தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் வேகமாக நடைபெறுவதைப் போல பழங்குடியினர் பகுதிகளிலும் அதே வேகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு முதன்முறையாக சேவையாற்ற தனக்கு வாய்ப்பு கிடைத்த போது பழங்குடியினர் நலனையே தனது முதன்மை முன்னுரிமையாக வைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த துளசி கவுடா என்ற பெண்ணுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பழங்குடியினரின் நலனுக்காக பணியாற்றுபவர்களே, நாட்டின் உண்மையான வைரங்கள் என புகழாரம் சூட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்