டெல்லி காற்றுமாசு - எச்சரித்த உச்சநீதிமன்றம்

காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளில் சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம் என டெல்லி அரசை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம், காற்று மாசை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது.
டெல்லி காற்றுமாசு - எச்சரித்த உச்சநீதிமன்றம்
x
காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளில் சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம் என டெல்லி அரசை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம், காற்று மாசை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது. இன்று நடைபெற்ற விசாரணையில்,  பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காற்று மாசுபாட்டை  கட்டுப்படுத்த ஒற்றை இலக்க வாகன போக்குவரத்திற்கும், திறந்தவெளி சமையல் கூடங்களை தடுக்கவும், டீசல் ஜெனரேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும், செங்கல் சூளைகளை மூடவும் டெல்லி அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகளால் 10 சதவீதம் அளவுக்கு காற்று மாசடைவதாக வாதிட, குறுக்கிட்ட நீதிபதிகள் பயிர்க் கழிவு காற்று மாசுக்கு காரணமில்லை என கடந்த விசாரணையில் தெரிவித்ததாகவும்,  மாநகரங்களில் காற்று மாசுவை தடுக்க நடவடிக்கைகள் என்ன எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து டெல்லி சாலையை தூய்மையாக்க எத்தனை இயந்திர மயமாக்கப்பட்ட  வாகனங்கள் உள்ளன? என நீதிபதிகள் கேள்வி எழுப்ப, 69 வாகனங்கள் உள்ளதாக மத்திய  அரசின் சொலிசிட்டர் பதிலளித்தார். 
அதற்கு எட்டாயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலைகளை தூய்மையாக 69 வாகனங்கள் போதுமா? என மேலும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தொழிற்சாலை மற்றும் வாகனங்களின் புகை காற்று மாசுக்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறியதுடன், அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். பதிலளித்த டெல்லி அரசு வழக்கறிஞர், மாநகராட்சிகள் மூலம் சாலைகளை தூய்மை செய்து வருவதாக கூற, பாட்டி கதையை வேறு யாரிடமாவது கூறுங்கள்? என நீதிபதிகள் கண்டித்தனர். காற்று மாசுவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டெல்லி அரசின் வரி வருவாயை தணிக்கை செய்ய உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர். மேலும், காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளை நாளை மாலைக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். 









Next Story

மேலும் செய்திகள்