ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை - நாளை மறுதினம் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் நடைத் திறக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை - நாளை மறுதினம் நடை திறப்பு
x
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், கோவிலில் வரும் 15 ஆம் தேதி  நடைத்திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைதிறந்த பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேல் சாந்தி பரமேஸ்வரன் மற்றும் மாளிகைபுரம் மேல்சாந்தி சம்பு ஆகியோர் இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்வர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டைப் போலவே பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி, நாளொன்றுக்கு முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுவர். மேலும், பக்தர்கள் இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை எனவும், ஆனால் பம்பை ஆற்றில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி முன்பதிவு மைய வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்