19 மாநிலங்களுக்கு சுகாதார மானியம் விடுவிப்பு

தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு சுமார் 8453 கோடி ரூபாய் சுகாதார மானியத்தை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்து உள்ளது.
19 மாநிலங்களுக்கு சுகாதார மானியம் விடுவிப்பு
x
15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி 2021-2026-ம் ஆண்டு வரை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 70 ஆயிரத்து 51 கோடி ரூபாய் சுகாதார மானியம் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில், 19 மாநிலங்களுக்கு சுமார் 8 ஆயிரத்து 453 கோடி ரூபாய் சுகாதார மானியத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை விடுவித்து உள்ளது.

இதன்படி, தமிழகத்திற்கு சுகாதார மானியமாக சுமார் 805 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தத் தொகை, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்