நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தலைவர்களின் வருகையால் தீவிர பாதுகாப்பு

திருப்பதியில் நடைபெற உள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தலைவர்களின் வருகையால் தீவிர பாதுகாப்பு
x
திருப்பதியில் தென்னிந்திய முதலமைச்சர்களின் 29வது மாநாடு நாளை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்களும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் -நிகோபர் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும், அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றன. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருப்பதிக்கு வருகை தரும் அமித்ஷாவை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் தனியார் ஹோட்டலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைப் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் தனியார் ஹோட்டல் வரை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாநாட்டிற்கு பிறகு திருமலைக்கு செல்லும் தலைவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மலைப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்