மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,
மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை
x
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர், தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலி, முதல் ஓரிரு நாட்கள் மிகவும் ஆக்ரோசமாக காணப்பட்டதாகவும், அதற்கு தொடர்ந்து சிகிச்சையும், உணவுக்காக மாட்டு இறைச்சியும் வழங்கப்பட்டது. பின்னர், காயங்கள் தேறி வந்த நிலையில் புலியின் வீடியோ பதிவு காட்சியை,  கர்நாடக வனத்துறையினர் தொடர்ந்து அனுப்பி வைத்துள்ளனர். அந்த காட்சியில், ஒளிப்பதிவு செய்யும் நபரை, டி 23 ஆக்ரோஷமாக தாக்குவது போன்று அந்த வீடியோவில் காட்சி இடம்பெற்றுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்