டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா - விருதை வழங்கி கவுரவித்தார் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாடகி சித்ராவுக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.
x
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாடகி சித்ராவுக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக வழங்கப்படாமல் இருந்த 2020, 2021 ஆம் ஆண்டுக்கான விருதுகளை 2-வது நாளாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில்,  மறைந்த அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விருதை அவர்களது குடும்பத்தார் வாங்கிக் கொண்டனர். அதேபோல் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பத்மபூஷன் விருதை குடியரசு தலைவர் வழங்கினார்.பிரபல பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விருதை அவருடைய மகன் எஸ்.பி. சரண் பெற்றுக்கொண்டார்.முன்னாள் இந்திய கூடைப்பந்து வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்