வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு
x
விவசாயிகள் அமைப்பின் சார்பாக டெல்லி சிங்க் எல்லை பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற 26ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஓராண்டு போராட்டத்தை கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.மேலும்,நாடாளுமன்றக்  குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள நிலையில்  டிராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை விவசாயிகள் ஒவ்வொரு நாளும் டிராக்டர் மூலம் அமைதியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என விவசாயிகள் அமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்