94வது பிறந்த நாள் கொண்டாடிய எல்.கே.அத்வானி - மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா நேரில் வாழ்த்து

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
94வது பிறந்த நாள் கொண்டாடிய எல்.கே.அத்வானி - மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா நேரில் வாழ்த்து
x
பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானி இன்று டெல்லியில் உள்ள வீட்டில், தனது 94வது பிறந்த நாளை கொண்டாடினர். இதையொட்டி, பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேரில் சென்றனர். எல்.கே. அத்வானிக்கு, பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து வணக்கம் தெரிவித்தார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும் நேரில் சென்று அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தினருடன் அத்வானி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். 


Next Story

மேலும் செய்திகள்