மாவோயிஸ்ட் ரவி முருகேசன் கைது - என்.ஐ.ஏ -விடம் ஒப்படைத்த கேரள போலீஸ்
கேரளா மாநிலம் கண்ணூரில் மாவோயிஸ்ட் ரவி முருகேசன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை தேசிய புலனாய்வு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கேரளா மாநிலம் கண்ணூரில் மாவோயிஸ்ட் ரவி முருகேசன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை தேசிய புலனாய்வு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர். நீலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தினத்தை அனுசரித்து ஆயுதப் பயிற்சி நடத்திய வழக்கில் ரவி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த வேலூரைச் சேர்ந்த ரவி முருகேசனை, தேசிய புலனாய்வு முகமை வளப்பட்டணத்தில் கைது செய்துள்ளது. ராகவேந்திரா என்ற பெயர் கொண்ட ரவி முருகேஷ் மற்றும் கௌதம் என்ற பெயர்களையும் பல இடங்களில் பயன்படுத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக கேரள போலீசார் தெரிவித்தனர். ரவி முருகேசன் உடன், காரில் பயணித்த மேலும் இரண்டு பேரை, தேவைப்பட்டால், என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை மேற் கொள்வார்கள் என கேரளா போலீசார் தெரிவித்தனர்.
Next Story

