டெல்லியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் - பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித்ஷா பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தல் இலக்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் - பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித்ஷா பங்கேற்பு
x
டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தல் இலக்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.   

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த 15 மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவின் தோல்வி மற்றும் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றை மையப்படுத்தி டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

இதில் கொரோனா விதிமுறைகள் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி , பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் 342 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா, மேற்குவங்க மாநிலத்தில் பாஜக மிக வேகமாக காலூன்றி வருவதாக குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் 18 மக்களவை உறுப்பினர்களும் 76 சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜக வசம் இருப்பதாக கூறினார். 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வரும் மக்களவை தேர்தலில் பாஜகவின் இலக்கு குறித்து உரையற்றியதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்