"ஹஜ் யாத்திரைக்கு விமான சேவை தேவை" - மத்திய அரசுக்கு மதுரை எம்.பி., வெங்கடேசன் கடிதம்

இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் இருந்து விமான சேவை தேவை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஹஜ் யாத்திரைக்கு விமான சேவை தேவை - மத்திய அரசுக்கு மதுரை எம்.பி., வெங்கடேசன் கடிதம்
x
இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் இருந்து விமான சேவை தேவை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கடந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக 21 புறப்பாடு மையங்கள் இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக, அது 10 ஆக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு அதே எண்ணிக்கையில் புறப்பாடு மையங்கள் இருப்பது ஏற்கமுடியாது என்ற அவர், மத்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்