ஆர்யன் கான் வழக்கின் அதிகாரி மாற்றம் - லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரால் மாற்றம்

லஞ்சம் கேட்ட சர்ச்சையில் சிக்கிய மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி, ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்யன் கான் வழக்கின் அதிகாரி மாற்றம் - லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரால் மாற்றம்
x
கடந்த மாதம்  2ம் தேதி சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். 

கைதானவர்களுக்கு சர்வதேச அளவில் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கை விசரித்து வந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல அதிகாரி சமீர் வான்கடே,  ஆர்யன் கானை விடுவிக்க கோடி கணக்கில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

போதைப்பொருள் வழக்கில் முக்கிய சாட்சியான பிரபாகர் சாயில், ஆர்யன் கானை விடுவிக்க  வான்கடே லஞ்சம் பெற முயன்றதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அமைச்சர் நவாப் மாலிக்கும் சமீர் வான்கடே மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 

இந்த  நிலையில் சமீர் வான்கடேவை ஆர்யன் கான் வழக்கில் இருந்து மாற்றம் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை உத்தரவிட்டுள்ளது. 

சமீர் வான்கடே விசாரித்து வந்த எஞ்சிய 5 வழக்குகளும் டெல்லியை சேர்ந்த சிறப்பு குழு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் சமீர் வான்கடே மும்பை மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்