பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு - வாட் வரியை குறைத்த கேரள அரசு
கேரள அரசு பெட்ரோலுக்கு 6 ரூபாய் 57 காசுகள், டீசலுக்கு 12 ரூபாய் 33 காசுகள் என வாட் வரியை குறைத்துள்ளது. தீபாவளி பண்டிகை ஒட்டி பெட்ரோலுக்கு 5 ரூபாய், டீசலுக்கு 10 ரூபாய் என கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
கேரள அரசு பெட்ரோலுக்கு 6 ரூபாய் 57 காசுகள், டீசலுக்கு 12 ரூபாய் 33 காசுகள் என வாட் வரியை குறைத்துள்ளது. தீபாவளி பண்டிகை ஒட்டி பெட்ரோலுக்கு 5 ரூபாய், டீசலுக்கு 10 ரூபாய் என கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, கேரள அரசும் வாட் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
இதன்படி திருவனந்தபுரத்தில் இன்று பெட்ரோல் 105 ரூபாய் 86 காசுகள் ஆகவும், டீசல் 93 ரூபாய் 52 காசுகள் ஆகவும் விற்பனையாகின்றன. கொச்சியில் பெட்ரோல் 103 ரூபாய் 70 காசுகள் ஆகவும், டீசல் 91 ரூபாய் 49 காசுகள் ஆகவும் விற்பனையாகின்றன. கோழிக்கோட்டில் பெட்ரோல் 103 ரூபாய் 97 காசுகள் ஆகவும், டீசல் விலை 92 ரூபாய் 57 காசுகள் ஆகவும் குறைந்துள்ளது.
Next Story

