டெல்லி காற்று மாசை தடுக்க நடவடிக்கை - ஹரியானாவில் பட்டாசு வெடிக்க, விற்க தடை

டெல்லியில் ஏற்படும் காற்று மாசு காரணமாக ஹரியானா மாநிலத்தில் பட்டாசு வெடிக்க மற்றும் விற்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காற்று மாசை தடுக்க நடவடிக்கை - ஹரியானாவில் பட்டாசு வெடிக்க, விற்க தடை
x
ஹரியானா அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி டெல்லி என்சிஆர் பகுதியில் அடங்கியுள்ள குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பட்டாசு வெடிக்கவும் விற்கவும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி பிவானி, சர்க்கி தாத்ரி, சோனிபட், ரேவாரி, ரோஹ்தக், பானிபட், பல்வால், உள்ளிட்ட டெல்லியை ஒட்டிய மாவட்டங்களில் பட்டாசு வெடித்தாலோ விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்துள்ளனர். காற்று மாசு அதிகமாக உள்ள மாவட்டங்களில் பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகளையும் ஹரியானா அரசு விதித்துள்ளது. 14 மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை சுமார் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்