அடுத்த ஆண்டு கோவாவில் தேர்தல் - இப்போதே சூடு பிடிக்க தொடங்கிய தேர்தல் களம்

கோவாவில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பைக்கில் சென்று அவர் மக்களை சந்தித்தார்.
அடுத்த ஆண்டு கோவாவில் தேர்தல் - இப்போதே சூடு பிடிக்க தொடங்கிய தேர்தல் களம்
x
கோவாவில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பைக்கில் சென்று அவர் மக்களை சந்தித்தார்.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவாவிற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  இப்போதே அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மீனவர் சமுதாயத்தினரிடம் தனது தேர்தல் பிரச்சாரத்தை ராகுல்காந்தி தொடங்கினார். பைக்கில் சில மணி நேரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வார்த்தை மட்டும் அல்ல, அது உத்திரவாதம் என்றார். கொடுத்த வாக்கு என்பது மிகவும் முக்கியம் என்றும், மற்ற தலைவர்களை போல் அல்லாமல் ஒரு விஷயத்தை சொன்னால், அதை நிச்சயம் செய்து காட்டுவேன் என, ராகுல்காந்தி உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்