பருவநிலை மாற்றம் பற்றி ஐ.நா மாநாடு - இலக்கை அறிவிக்க இந்தியா மறுப்பு

கார்பன் வெளியேற்றத்தை நிறுத்துவது தொடர்பாக ஒரு இலக்கை அறிவிக்க இந்தியா மறுத்துள்ளது.
பருவநிலை மாற்றம் பற்றி ஐ.நா மாநாடு - இலக்கை அறிவிக்க இந்தியா மறுப்பு
x
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் பற்றிய ஐ.நா மாநாடு ஞாயிறு அன்று தொடங்க உள்ளது. இந்த மாநாட்டில் புவிவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பாக இறுதிகட்ட விவாதங்கள் நடை பெற உள்ளன. 2050க்குள் கார்பன் வெளியேற்றத்தை வெகுவாக குறைக்க அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளன. சீனாவும், சவுதி அரேபியாவும் 2060க்குள் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதே போல இந்தியாவும் ஒரு இலக்கு ஆண்டை அறிவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் கோரியுள்ளன. ஆனால் இந்த கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது. இலக்கு தேதி வரை வெளியேற்றப்படும் கார்பனின் அளவு தான் முக்கியமாக கருதப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் ஆர்.பி.குப்தா கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்