"இந்தியா-ஆசியான் நாடுகளிடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்" - பிரதமர் மோடி உறுதி

பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இந்தியா ஆசியான் நாடுகளுக்கு இடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆசியான் நாடுகளிடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் - பிரதமர் மோடி உறுதி
x
புருனே சுல்தான் அழைப்பின் பேரில், 18வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசியான் - இந்தியா இடையேயான  நீடித்த ஒத்துழைப்பு நிலவரம்  மற்றும் கொரோனா பெருந்தொற்று, சுகாதாரம், வர்த்தகம், இணைப்பு, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவை உட்பட முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய பிரதமர், கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தாலும், இந்த சவாலான காலகட்டம் ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியாவின் நட்புறவுக்கு பரிட்சையாக விளங்கியதாகக் குறிப்பிட்டார். இந்தியாவும் ஆசியான் நாடுகளும் ஆயிரம் ஆண்டுகளாக துடிப்புள்ள உறவை கொண்டிருக்கிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக விளங்குவதாக குறிப்பிட்ட மோடி, பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இந்தியா - ஆசியான் நாடுகள் இடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்று உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்