கடனை திருப்பி கேட்டவர் மீது காரால் மோதல் - சமூக வலைதளங்களில் பரவும் சிசிடிவி காட்சிகள்
கேரளாவில் கடனை திருப்பி கேட்டவரை 2 கி.மீ தூரம் காரின் முன்பகுதியில் வைத்து ஓட்டிச் சென்று, நூழிலையில், உயிர் தப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கடனை திருப்பி கேட்டவரை 2 கி.மீ தூரம் காரின் முன்பகுதியில் வைத்து ஓட்டிச் சென்று, நூழிலையில், உயிர் தப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் பெருந்தலமண்ணா பகுதியைச் சேர்ந்த பைசல் என்பவர் உஸ்மான் என்பவருக்கு 78 ஆயிரம் ரூபாய் கடன் அளித்து உள்ளார். இந்நிலையில் கடனை திரும்ப கேட்க சென்ற பைசல் மீது காரால் மோதிய உஸ்மான், காரின் முன்பகுதியில் பைசல் சிக்கிய நிலையில் 2 கி.மீ தூரம் வேகமாக ஓட்டி சென்றுள்ளார். உடனடியாக காரை வழிமறித்த பொதுமக்கள், காயமடைந்த பைசலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
Next Story

